3:32 AM
0

ஆரம்பம் விமர்சனம்

நவம்பர் 2 தான் தீபாவளி ஆனால் ஆரம்பம் பட ரிலீசினால் 'தல' ரசிகர்களுக்கு இன்று தான் தீபாவளி என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அஜீத் தன் ரசிகர்களை ஏமாற்றாமல் தன் ரசிகர்களூக்கு தீபாவளி ட்ரீட் தந்துள்ளார்.

அஜீத் மும்பையில் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆனால் வில்லன் கும்பலிடம் இருந்து கொள்ளையடிக்கிறார் ஆனால் படம் மங்காத்தா இல்லை, வில்லனை கொல்ல உதவி செய்கிறார் நயன்தாரா ஆனால் படம் பில்லாவும் அல்ல.

தீவிரவாத தாக்குதலில் அவரது சக போலிஸ் நண்பர் இறந்து விடுகிறார். காரணம் புல்லட் ப்ரூப் வாங்குவதில் நடந்த ஊழல் என தெரிய ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சரும் கமிஷ்னரும் அஜித்தின் குடும்பத்தை கொன்று விடுகின்றனர். ஆர்யாவை பயன்படுத்தி வில்லன் கும்பலுக்கு ஏகப்பட்ட டேமேஜை ஏற்படுத்துகிறார் அஜீத். கடைசியில் அஜீத், நயன்தாரா, ஆர்யா கூட்டணி எப்படி வில்லன் கும்பலை ஒழிக்கிறார்கள் என்பது தான் படம்.

வழக்கமான லூஸூ ஹீரோயின் டாப்ஸி. முதல்பாதி படம் மொக்கை, இரண்டாம் பாதி விறு விறுப்பு. அஜீத் மட்டும் இல்லையென்றால் படம் ஃப்ளாப் ஆகியிருக்கும், முழுபடத்தையும் அஜீத் தாங்குகிறார். மேக்கிங் கிளாசிக் என்பதால் படம் தப்பி பிழைக்கிறது.

அஜீத் மைனஸ் ஆரம்பம் ரம்பமாகியிருக்கும், அஜீத் இருப்பதால் படம் தீபாவளி ட்ரீட் ஆகிவிட்டது.

படம் பார்த்துவிட்டீர்களா? உங்கள் பார்வையில் படம் எப்படி என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்.

shared via

0 comments:

Post a Comment

Recent Comments

Labels

Popular Posts

My Blog List

Popular Posts