7:27 PM
0

Img மாணவ மாணவிகள் விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்: அப்துல்கலாம் பேச்சு Student worked diligently certainty of victory abdul kalam

சென்னை, டிச. 12-

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ரோசரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிக்கூட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பள்ளிக்கூட வாசலில், பள்ளிக்கூட நிர்வாகி சகோதரி லீனா டிசவுசா, தாளாளர் சகோதரி சிறியபுஷ்பம், பிரின்சிபால் சகோதரி மேரிஜக்காரியா ஆகியோர் வரவேற்றனர்.

வரவேற்பைத்தொடர்ந்து, பள்ளிக்கூட வளாகத்தில் மாணவிகளால் அமைக்கப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சியை அப்துல்கலாம் திறந்துவைத்தார். அதில் இடம்பெற்றிருந்த, பி.எஸ்.எல்.வி.ராக்கெட், செவ்வாய் கிரகத்தில் ராக்கெட் இறங்குவது, நீர் ராக்கெட் உள்ளிட்ட அறிவியல் சாதனங்களை பார்வையிட்டு மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்து மகிழ்ந்தார்.

அதைத்தொடர்ந்து, மாணவிகள் மத்தியில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பேசியதாவது:-

பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்யவேண்டும். என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கவேண்டும். அதை அடைவதற்கு உழைப்பு முக்கியம்.

உழை, உழை, உழைத்துக்கொண்டே இரு. அத்துடன் மாணவ-மாணவிகளுக்கு விடாமுயற்சியும் இருக்கவேண்டும். விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம். நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும். நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை.

நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும். தாமஸ் ஆல்வா எடிசன், ரைட் சகோதரர்கள், அலெக்சாண்டர் கிரகாம்பெல், சர்.சி.வி.ராமன், மேடம் கியூரி, சீனிவாச ராமானுஜம் போன்றோர் தங்கள் லட்சியத்தில் எள்ளளவும் விலகாமல் தங்கள் லட்சியத்தை அடையும் வரை மனம்தளராமல் உழைத்ததால் வெற்றிபெற்றார்கள். அதை நீங்கள் மனதில்பதியவைத்துக்கொண்டால், நீங்களும் லட்சியத்தை அடையமுடியும்.

இவ்வாறு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பேசினார்.

அதையடுத்து, மாணவிகளின் கேள்விகளுக்கு அப்துல்கலாம் பதில் அளித்தார். நிகழ்ச்சியில், ரோசரி மெட்ரிக் பள்ளிக்கூடத்தில் பணியாற்றி ஓய்வுபெறவுள்ள ஆசிரியைகள் பி.ஜே.மேரி,

லல்லுமாத்யூ, அலுவலக பணியாளர்கள் தெரசா மார்க்நாதன், எஸ்தர் மோகன்ராஜ் ஆகியோருக்கும், ரோசரி மெட்ரிக் பள்ளிக்கூடத்தில் கடந்த ஆண்டு பிளஸ்-2, பத்தாம்வகுப்பு படித்து பள்ளிக்கூட இறுதி தேர்வில், மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்ற மாணவிகள் காவியா, ஸ்ருதி ஆகியோருக்கும் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பரிசு வழங்கி பாராட்டினார்.

முன்னதாக, பள்ளிக்கூட பிரின்சிபால் மேரி ஜாக்ரியா வரவேற்று பேசினார். அதைத்தொடர்ந்து மாணவிகளின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. 'ஹீமோபிலியா சொசைட்டி' (ரத்த உறையாத குறைபாடு) சென்னை கிளையின் வெள்ளி விழா சென்னை அடையாரில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன (சி.எல்.ஆர்.ஐ) வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் போது ஹீமோபிலியா குறைபாடால் பாதிக்கப்பட்ட ஹேமந்த்ராஜ் என்ற சிறுவன் அப்துல்கலாமிடம் 'உங்களை போன்று என்னாலும் அறிவியல் விஞ்ஞானியாக வர முடியுமா?' என்று கேட்டான். அதற்கு தன்னம்பிக்கை இருந்தால் எதுவேண்டுமானால் ஆகலாம் என்று பதிலளித்தார்.

தொடர்ந்து ஹீமோபிலியா குறைபாடால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எழுப்பிய கேள்விகளுக்கு நகைச் சுவையாக பதிலளித்தார். நிகழ்ச்சியில் ஹீமோபிலியா சொசைட்டி சென்னை கிளையின் தலைவர் டாக்டர் ஆர்.வரதாராஜன் வரவேற்று பேசினார். பொருளாளர் அம்பிகா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஹீமோபிலியா குறைபாட்டில் பாதிக்கப்பட்ட குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
...

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Recent Comments

Labels

Popular Posts

My Blog List

Popular Posts