Img மாதி புயல் வலுவிழந்து சென்னை நோக்கி வருவதால் கனமழை: வானிலை மையம் அறிவிப்பு Heavy rains due to Maathi storm coming towards Chennai
சென்னை, டிச. 9–
வங்க கடலில் உருவான மாதி புயல் தற்போது மத்திய மேற்கு வங்க கடலில் 400 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது. இன்று காலை வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது சென்னை நோக்கி நகர்ந்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழையும், 48 மணி நேரத்தில் கன மழையும் பெய்ய கூடும்.
எனவே வட தமிழக கடலோர மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். தென் தமிழக மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும். சென்னையில் மேக மூட்டமாக காணப்படும். இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
...
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.