Election Commission ordered Jagan Mohan Reddy the party symbol of the Fan
ஜெகன் மோகன் ரெட்டி கட்சிக்கு மின்விசிறி சின்னம் நிரந்தரமானது: தேர்தல் கமிஷன் உத்தரவு Election Commission ordered Jagan Mohan Reddy the party symbol of the Fan
நகரி, டிச. 19–
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 2011–ம் ஆண்டு மார்ச் 12–ந் தேதி உதயமானது. அந்த ஆண்டு மே மாதம் கடப்பா பாராளுமன்ற தொகுதி மற்றும் புலிவெந்தலா சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
கடப்பா தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியும், புலிவெந்தலா தொகுதியில் அவரது தாயார் விஜய லட்சுமியும் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தனர். தேர்தலில் அவர்கள் சீலி ங்மின்விசிறி சின்னத்தை தேர்ந்து எடுத்தனர்.
பின்னர் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த இடைத் தேர்தலில் அக்கட்சி வேட்பாளர்கள் சீலிங் மின்விசிறி சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் வர இருக்கும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் போது சீலிங் மின்விசிறி சின்னத்தையே ஒதுக்க வேண்டுமென அக்கட்சி உறுப்பினர் கே. சிவகுமார் மத்திய மற்றும் மாநில தேர்தல் கமிஷனருக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து ஓய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு சீலிங்மின் விசிறி சின்னம் நிரந்தரமாக ஒதுக்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இந்த தகவலை மத்திய தேர்தல் ஆணையகம் மாநில அதிகாரிக்கும் ஒய்.எஸ்.ஆர் கட்சி அலுவலகத்திற்கும் கடிதம் மூலம் அனுப்பி உள்ளது.
...
Election Commission ordered Jagan Mohan Reddy the party symbol of the Fan
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.