7:54 PM
0

ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் மோதும் 5–வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா முதலில் ஆடியது. 64 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஆரோன் பிஞ்ச் (7ரன்), வாட்சன் (0), கேப்டன் கிளார்க் (8), மார்ஷ் (36) ஆகியோர் ஆட்டம் இழந்தனர். பெய்லி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அரைசதம் அடித்த அவர் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸ் அவரை வெளியேற்றினார்.

அடுத்தடுத்து களமிறங்கிய மேத்திவ் வாடே, பால்க்னர் தன் பங்குக்கு ரன்கள் குவித்தனர் மேத்திவ் வாடே 31 ரன்கள் பால்க்னர் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக பெய்லி 56 ரன்களும், மார்ஸ் 36 ரன்களும் எடுத்தனர்.

218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே மோசமாக அமைந்தது. இயான் பெல் (14), ஸ்டோக்ஸ் (0) நிலைக்கவில்லை. கேப்டன் குக் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ரூட் அரை சதம் எட்டினார். இவர் 55 ரன்களில் வெளியேறினார்.

மார்கன் 39 ரன்களுக்கு பால்க்னர் பந்தில் அவுட்டானார். பட்லர் (5), பிரஸ்னன் (13), பிராட் (7) நிலைக்கவில்லை. கடைசி ஓவரில், இங்கிலாந்து வெற்றிக்கு 6 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. இதன் முதல் பந்தில் ரன்கள் எதுவும் எடுக்க வில்லை இரண்டாவது, மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் கிடைத்தது. நான்காவது பந்தில் டிரட்வெல் (0) அவுட்டாக, இங்கிலாந்து அணி 49.4 ஓவரில், 212 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி தொடரை 4–1 என வென்றது. ஆட்ட நாயகன் விருதை பால்க்னர் தட்டிச் சென்றார்.

0 comments:

Post a Comment

Recent Comments

Labels

Popular Posts

My Blog List

Popular Posts