American Girl beaten her boy friend for refusing hug கட்டிப்பிடிக்க மறுத்த காதலனை அடித்து உதைத்த அமெரிக்க பெண் American Girl beaten her boy friend for refusing hug
வாஷிங்டன், ஜன. 1-
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மனாட்டி என்ற பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஷாவோனா ரம்ப் என்ற பெண், தனது காதலனுடன் வசித்து வருகிறார். இருவரும் தங்கள் குடியிருக்கும் வீட்டிலேயே அடிக்கடி மது அருந்துவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த வாரம் இருவரும் தூங்குவதற்கு முன் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். பின்னர் போதையுடன் இருவரும் தூங்க சென்றனர். அப்போது, காதல் மயக்கத்தில் இருந்த ஷவோனா தன்னை கட்டித் தழுவும்படி காதலனிடம் கூறியுள்ளார். காதலன் மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். ஷவோனா தனது காதலனின் சட்டையைப் பிடித்து இழுத்து அடித்துள்ளார். இதனால் காதலன் வீட்டை விட்டு வெளியேற முயன்றார். ஒரு கட்டத்தில் ஷவோனா, சமையல் அறையில் உள்ள கத்தியை எடுத்து குத்துவதற்கு முயன்றுள்ளார். ஒருவழியாக அவரிடம் இருந்து விடுபட்ட காதலன், போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷவோனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் 250 டாலர் ரொக்க ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
...
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.