Shoe hurled at Nithish kumar in in Begusarai
பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் மீது செருப்பு வீச்சு shoe hurled at Nithish kumar in in Begusarai
பாட்னா, டிச.23-
பீகார் மாநிலம் பெகுசாராய் மவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சங்கல்ப்ப யாத்திரை நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் பங்கேற்றார்.
அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே பேசிய அவர், தனது தலைமையிலான மாநில அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களை பட்டியலிட்டார். பீகாரில் மீண்டும் இருண்டகால ஆட்சியை ஏற்படுத்துவதற்காக லல்லு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்று, ஜாமினில் விடுதலையான லல்லு பிரசாத் யாதவ்வுக்கு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு சென்று திரும்பிய தியாகிக்கு இணையான வரவேற்பு அளிக்கப்படுவதையும் அவர் வன்மையாக கண்டித்தார்.
எதிர்க்கட்சிகளை தாக்கி இவ்வாறு காரசாரமாக பேசிக்கொண்டிருந்த போது மேடையின் எதிரே அமர்ந்திருந்த மக்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர் நிதிஷ் குமாரை நோக்கி ஒரு செருப்பை வேகமாக வீசினார்.
இதனால், பேசிக்கொண்டிருந்த நிதிஷ் குமார், அதிர்ச்சியடைந்து சிறிது நேரம் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றார்.
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட கூட்டத்தில் முதல் மந்திரியின் மீது செருப்பை வீசியவர் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறிப்போன போலீசார் சிலரை பிடித்து விசரித்தனர்.
...
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.