12:59 AM
0

scandal has come out of exile parties Kejriwal sworn speech நாட்டை விட்டு ஊழல் கட்சிகளை விரட்டும் காலம் வந்து விட்டது: பதவி ஏற்றதும் கெஜ்ரிவால் பேச்சு scandal has come out of exile parties Kejriwal sworn speech

புதுடெல்லி, டிச. 28–

டெல்லி முதல்– மந்திரியாக பதவி ஏற்ற பிறகு கெஜ்ரிவால் ராம்லீலா மைதானத்தில் திரண்டிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். பாரத் மாதாக்கே ஜே என்று கூறியபடி அவர் பேச்சைத் தொடங்கினார். அவர் கூறியதாவது:–

உங்கள் முன்னிலையில் இங்கு நான் முதல்–மந்திரியாக பதவி ஏற்றுள்ளேன். நான் மட்டுமே முதல்வராக பதவி ஏற்கவில்லை. டெல்லியில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இன்று முதல்–மந்திரியாக என்னுடன் சேர்ந்து பதவி ஏற்றுள்ளனர்.

டெல்லியில் உள்ள 1½ கோடி மக்கள் கடுமையாக போராடி இந்த மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறீர்கள். இனி உங்களுக்கு தேவையானதை நீங்களே செய்து கொள்ளலாம்.

எல்லா வேலைகளையும் உடனே செய்து விட முடியாது. அதற்கான மந்திர கோல் எதுவும் என்னிடம் இல்லை.

முதலில் நாட்டில் எல்லா மட்டத்திலும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். இந்தியாவில் இருந்து ஊழல் அரசியல் கட்சிகளை விரட்டும் போராட்டம் இன்று தொடங்கி விட்டது.

அரசு அலுவலகங்களில் இனி உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் எங்களிடம் புகார் செய்யுங்கள். லஞ்சம் கேட்டவரை கையும் களவுமாக பிடித்து நாங்கள் தண்டிப்போம்.

இன்று நாட்டில் தவறான போலி பெருமையுடன் கட்சிகள் உள்ளன. அதை மாற்றப் போகிறோம்.

மக்கள் நடத்திய பெரும் போராட்டம்தான் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்பதை அதிகாரிகள் மறந்து விடக் கூடாது. எனவே மக்களுக்கு தேவையானதை, நேர்மையாக செய்து கொடுங்கள், மக்கள் கையில் அதிகாரத்தை கொடுங்கள்.

அது போல மந்திரிகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். மக்களுக்காக பாடுபங்கள். இல்லையேல் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார தயாராக இருக்க வேண்டும்.

ஊழல் இல்லாத நல்லாட்சி கொடுப்பதற்கான நமது போராட்டம் நீண்ட தொலைவு கொண்டது. நாட்டிலும், டெல்லியிலும் ஊழலை வேரோடு ஒழிக்க எங்களுக்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை.

நமது நாட்டு அரசியல் கறை படிந்து அழுக்காக உள்ளது. அதுதான் முக்கிய பிரச்சினை. அதை நாம்தான் சுத்தப்படுத்த வேண்டும்.

நாம் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று அன்னாஹசாரே கூறினார். ஆனால் அரசியலுக்குள் நுழைந்தால்தான் அதை நம்மால் சுத்தப்படுத்த முடியும் என்று அவரிடம் நான் கூறினேன். இன்று அந்த பணியை நீங்கள் என்னிடம் கொடுத்து இருக்கிறீர்கள்.

இதை ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகிகளும் உணர்ந்து, புரிந்து நடந்து கொள்ள வேண்டும். மக்களிடம் மிகவும் ஆணவமாக நடந்து கொள்ளாதீர்கள். அன்போடு நடந்து கொள்ளுங்கள்.

3–ந்தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது. அதில் என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது.

என்ன நடந்தாலும் நாங்கள் கவலைப்பட போவதில்லை. மக்களோடு மக்களாக இருந்து சேவை செய்ய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

பேச்சை நிறைவு செய்யும்போது அவர் தேசப்பக்தி பாடல் ஒன்றை பாடினார்.

பிறகு கெஜ்ரிவால் தனது மந்திரிகளுடன் மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.

...

0 comments:

Post a Comment

Recent Comments

Labels

Popular Posts

My Blog List

Popular Posts