12:36 AM
0

Img வேலூர் ஜெயிலில் சந்தித்த போது நளினியை பிரியங்கா மிரட்டினாரா?: வக்கீல் புகழேந்தி பேட்டி Priyanka threats to Nalini in Vellore Jail lawyer Pugalenthy interview

வேலூர், டிச.21–

வேலூர் ஜெயிலில் வக்கீல் புகழேந்தி நளினியை இன்று சந்தித்து பேசினார். அவரிடம் நளினியை ஜெயிலில் சந்தித்த போது பிரியங்கா மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த புகழேந்தி இதுபற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை என்றார்.

மேலும் அவர் கூறுகையில்:– திருநெல்வேலியில் உள்ள தனது தந்தை சங்கர நாராயணனை சந்திக்க ஒரு மாதம் விடுப்பு வழங்க வேண்டுமென நளினி ஜெயில் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளார்.

24 ஆண்டுகள் சிறையில் இருந்து நேற்று விடுதலையான விஜயா விடுதலைக்கு நளினி அதிக சிரமம் எடுத்து கொண்டார்.

விஜயாவின் கணவர் சுப்பிரமணி விடுதலைக்கு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளோம். இதுபற்றி விவாதிக்க நளினியை இன்று சந்தித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து ஆண்கள் ஜெயிலில் உள்ள முருகன் 24 ஆண்டுக்கு பின் விடுதலையான விஜயாவின் கணவர் சுப்பிரமணி ஆகியோரை வக்கீல் புகழேந்தி சந்தித்து பேசினார்.

...

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Recent Comments

Labels

Popular Posts

My Blog List

Popular Posts