devyani housemaids agent father accusation தேவயானி வீட்டு பணிப்பெண் அமெரிக்காவின் ஏஜெண்டு: தந்தை குற்றச்சாட்டு devyani housemaids agent father accusation
மும்பை, டிச.22–
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைத் தூதராக பணியாற்றிய தேவயானி மீது அவரது வீட்டுப் பணிப்பெண் சங்கீதா பல்வேறு புகார்களை அமெரிக்க போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனால் தேவயானியை அமெரிக்க போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். வழக்கும் தொடரப்பட்டுள்ளது. தேவயானி மீதான நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தியது. ஆனால் அமெரிக்கா மறுத்து விட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மும்பையில் வசிக்கும் தேவயானியின் தந்தை உத்தம் கோப் ரகடே கூறியதாவது:–
தேவயானி தைரியமான பெண். அவர் தனது அன்றாடப் பணிகளை முறையாக செய்து வந்தார். அவர் மீதான குற்றச்சாட்டில் சதி உள்ளதை மறுக்க முடியாது. அவ்வாறாகவே இந்திய அரசு கருதுகிறது.
தேவயானி வீட்டில் பணியாற்றிய சங்கீதா ரிச்சர்ட் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யின் ஏஜெண்டாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தேவயானி மீதான பொய்க் குற்றச்சாட்டுகளை கைவிட்டால் தான் எங்களுக்கு நீதி கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் இருந்த இந்திய குடியரசு கட்சித் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராம்தாஸ் அதாவலே கூறியதாவது:–
சங்கீதா ரிச்சர்ட் சி.ஐ.ஏ. ஏஜெண்டாக இருக்கலாம். இந்த கோணத்தில் மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தேவயானி தந்தை தலைமையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க திட்ட மிட்டுள்ளோம்.
தேவயானி மீதான வழக்கை கைவிட இந்தியா தொடர்ந்து அமெரிக்காவுக்கு நெருக்கடி தரவேண்டும். இதுதொடர்பாக ஒபாமாவுக்கு நாங்கள் இ.மெயில் அனுப்பினோம். அதற்கு இதுவரை பதில் வரவில்லை. தேவயானி மீதான வழக்கை கைவிட மறுத்தால் அந்நாட்டுடனான உறவை முறித்துக் கொள்ள வலியுறுத்துவோம்.
இவ்வாறு ராம்தாஸ் அதாவலே கூறினார்.
... devyani housemaids agent father accusation
0 comments:
Post a Comment