chattisgarh voter list Actress Aishwarya Rai name சத்தீஷ்கார் வாக்காளர் பட்டியலில் நடிகை ஐஸ்வர்யாராய் பெயர்: விசாரணை நடத்த உத்தரவு chattisgarh voter list Actress Aishwarya Rai name
ரெய்கார்க், டிச.29-
மும்பையில் தனது கணவர் அபிஷேக்பச்சனுடன் வசித்து வரும் பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யராயின் பெயர் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தந்தையுடன் வசிப்பதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளது.
சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் மாவட்டம் பதால்கான் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் குஹாரி கிராமத்தில் ஐஸ்வர்யராய் வசிப்பதாக அவரது பெயர் உள்ளது. வாக்காளர் பட்டியலில் ஜஸ்வர்யாராய் புகைப்படம் மிகத்தெளிவாக உள்ளது.
அந்த தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 15-ல் ஜஸ்வர்யாராய் பெயர் இடம் பெற்று உள்ளது. அதில் ஐஸ்வர்யராய் (வயது23), குஹாரி கிராமம், வீட்டு எண் 376, அவரது தந்தை பெயர் தினேஷ்ராய் என குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜஷ்பூர் மாவட்ட கலெக்டர் எல்.எஸ்.கேன் தெரிவித்தார். அவர் இந்த பகுதியில் வசிக்கவில்லை. அப்படியிருந்தும் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது எப்படி? என்று விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
...
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.