ஆக்சன் ஹீரோவாகும் கடல் கெளதம்!
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கெளதம். நவரசநாயகன் கார்த்திக்கின் மகனான இவருக்கு நடித்த முதல் படம் ஓடாதபோதும் தற்போது கைநிறைய படங்கள் உள்ளன.
அதனால் தோல்வி அதிர்ச்சியிலிருந்து மீண்டும் உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார் கெளதம். மேலும், ஆரம்பத்தில் அப்பாவிடம் நடிப்பு டியூசன் எடுத்து வந்த கெளதம், இப்போது அதிலிருந்து விடுபட்டு தன்னிச்சையாக நடிக்கத் தொடங்கி விட்டாராம்.
அதனால், அடிக்கடி மகன் நடிப்பதைப்பார்க்க ஸ்பாட்டுக்கு விசிட் அடித்து வந்த கார்த்திக், இப்போது அந்த வேலையை விட்டு விட்டாராம். அதேசமயம், தற்போது தனுஷ் நடிக்கும் அநேகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கார்த்திக், அவுட்டோரில் இருந்தபடியே மகனின் நடிப்பு குறித்து சம்பந்தப்பட்ட டைரக்டர்களிடம் கேட்டறிந்து வருகிறாராம்.
அந்த அளவுக்கு மகனின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு வரும் கார்த்திக், கெளதமை ஆக்சன் ஹீரோவாக்குவதற்காகவும் கதை தேடிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் எஸ்.தாணுவின் மகன் கலாபிரபு சொன்ன ஆக்சன் கதை பிடித்து விடவே சிப்பாய், வை ராஜா வை படங்களை முடித்ததும் அவர் படத்தில் நடிப்பதற்கு கெளதமை தயார்படுத்தி வருகிறார்.
ஏற்கனவே சாந்தனுவைக்கொண்டு சக்கரகட்டி என்ற படத்தை இயக்கி தோல்வி கண்ட கலாபிரபு, இந்த முறை வெற்றிக்கனியை எட்டிப்பறித்து விட வேண்டும் என்று ஆக்சன் கதைக்குள்ளும் காமெடியை திணித்து ஸ்கிரிப்ட் பண்ணிக்கொண்டிருக்கிறாராம்.
shared via
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.