11:47 PM
0

Img தேர்தல் பிரசாரத்தில் விதிமீறல்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை Violation of the election campaign Arvind Kejriwal warning to the Election Commission

புதுடெல்லி, ஜன. 25–

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்காளர்களிடையே துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

அந்த துண்டு பிரசுரங்களில் மதரீதியாக சில வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. இது தேர்தல் நடத்தை விதி மீறல் என்று கூறி பாரதீய ஜனதா வேட்பாளர் ஹர்ஷ் வார்த்தன் தேர்தல் கமிஷனில் புகார் கூறினார்.

இந்த புகார் மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி அவர் பதில் மனு அனுப்பினார். அதில் தேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபடவில்லை என்று தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக விரிவான விளக்கம் அளித்து இருந்தார்.

இதை ஆலோசனை செய்த தேர்தல் கமிஷனர்கள் அவரது விளக்கத்தை ஏற்க மறுத்து கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான உத்தரவில், ''நீங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டது கண்டனத்துக்கு உரியது. இனி வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படாமல் கவனமுடன் செயல்பட வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

...

0 comments:

Post a Comment

Recent Comments

Labels

Popular Posts

My Blog List

Popular Posts