Kerala Youth Congress Rahul Gandhi was traveling in a police jeep that sits on top கேரள இளைஞர் காங்கிரஸ் பாதயாத்திரையில் போலீஸ் ஜீப்பின் மேல் அமர்ந்து பயணம் செய்த ராகுல்காந்தி Kerala Youth Congress Rahul Gandhi was traveling in a police jeep that sits on top
திருவனந்தபுரம். ஜன. 15–
கேரள மாநிலம் ஆலப்புழையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாதயாத்திரையை காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி தொடங்கி வைத்தார். பிறகு சிறிது தூரம் அவர் பாதயாத்திரையில் நடந்து சென்றார்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் ராகுல்காந்தியை பார்க்க தொண்டர்கள் முண்டியடித்தனர். அவர்களை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறும் நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று ராகுல்காந்தி பாதுகாப்புக்கு வந்து இருந்த போலீஸ் ஜீப்பு மீது ஏறி அமர்ந்து கொண்டார்.
அங்கிருந்தபடியே அவர் தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கைஅசைத்தார். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் போலீஸ் ஜீப் மீது ஏறி அமர்ந்து கொண்டனர். ராகுல்காந்தியின் இந்த அதிரடியால் பாதுகாப்புக்கு வந்து இருந்த போலீசார் செய்வதறியாது திகைத்தனர். சுமார் 15 நிமிடம் போலீஸ் ஜீப்பிலேயே பயணம் செய்த ராகுல்காந்தி அதன் பிறகு கீழே இறங்கினார்.
இதற்கிடையில் ராகுல்காந்தி போலீஸ் ஜீப்பில் பயணம் செய்தது பற்றி நூறநாடு போலீசில் மாவேலிகரையை சேர்ந்த வக்கீல் முஜிபுர்ரகுமான் புகார் செய்துள்ளார்.
அந்த புகாரில் ராகுல்காந்தி போலீஸ் ஜீப்பின் மேலே ஏறி கட்சி பாதயாத்திரையில் பங்கேற்றது தவறு என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
...
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.