devyani dress up fake checking video america says தேவயானி ஆடையை களைந்து சோதனையிடும் வீடியோ போலி: அமெரிக்கா சொல்கிறது devyani dress up fake checking video america says
வாஷிங்டன், ஜன. 4–
அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவயானி சோப்ரகடே. கடந்த டிசம்பர் 12–ந் தேதி நியூயார்க்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு விசா வாங்க போலியான தகவல்களை கொடுத்ததாகவும், அவருக்கு குறைந்த அளவு சம்பளம் கொடுத்ததாகவும் புகார் கூறபட்டுள்ளது.
இதற்கிடையே, விசாரணை நடந்தப்பட்ட போது, அவரது ஆடைகளை களைந்து சோதனையிடப்பட்டதாக தேவயானி புகார் தெரிவித்து இருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
அப்போது அமெரிக்கா மறுத்தது. அது போன்று சோதனையிட வில்லை என்று கூறியது. ஆனால், தற்போது தேவயானியின் ஆடைகளை களைந்து சோதனையிடுவது போன்ற வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது.
அக்காட்சி சோதனையிட்ட போது கண்காணிப்பு காமீராவில் பதிவானதாகும். இந்த வீடியோ காட்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் சிக்கல் எழுந்துள்ளது.
ஆனால், இந்த வீடியோ காட்சிகளை அமெரிக்கா திட்ட வட்டமாக மறுத்துள்ளது. இந்த வீடியோ காட்சி உண்மை அல்ல. போலியாக தயாரிக்கப்பட்டவை என கூறியுள்ளது.
அது குறித்து அமெரிக்க அரசின் துணை செய்தி தொடர்பாளார் ஹார்ப் கூறியதாவது:–
இது ஒரு போலி வீடியோ பல செய்தி இணைய தளங்களில் வெளியானதை பார்க்கும் போது அது உண்மை இல்லை என தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது மிகவும் ஆபத்தானது. விளைவுகளை பற்றி சிந்திக்காமல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த வீடியோ காட்சிகள் தேவயானி சம்பந்தப்பட்டது அல்ல. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் பேசிய பிறகு உறுதியாக தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதை தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் கூறும் போது:–
இப்பிரச்சினையால் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவில் இடையில் தற்காலிகமாக சிறிய தடுமாற்றம் ஏற்பட்டது. தூதரக அளவில் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்றார்.
...
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.