Vasan met with Vijayakanth for Parliament election பாராளுமன்ற தேர்தல்: விஜயகாந்துடன், ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு Vasan met with Vijayakanth for Parliament election
சென்னை, ஜன.1-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நேற்று இரவு 7 மணிக்கு திடீரென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்பின் போது பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு தே.மு.தி.க. வர வேண்டும் என்று ஜி.கே.வாசன் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு தி.மு.க., பாரதீய ஜனதா கட்சிகள் முயற்சித்து வரும் சூழ்நிலையில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் திடீரென்று விஜயகாந்தை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கேட்ட போது, சந்திப்பு நடந்தது உண்மைதான். மற்ற விவரங்களை தற்போது தெரிவிக்க இயலாது என்று தெரிவித்தனர்.
...
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.