உலகக்கோப்பை கபாடி இறுதி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா கோப்பையை 4 வது முறையாக வென்றது Indian uproots Pak for 4th consecutive time in Kabaddi WC

Indian uproots Pak for 4th consecutive time in Kabaddi WC
உலகக்கோப்பை கபாடி இறுதி போட்டி பஞ்சாப் மாநிலம் லுதியானா குருனானக் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் சுக்பீர் சரவான் தலைமையிலான இந்திய அணி, பாபர் குஜ்ஜர் தலைமையிலான பாகிஸ்தான் அணியை சந்தித்தது.
இப்போட்டியை பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் கண்டுரசித்தனர். பாகிஸ்தான் பஞ்சாப் முதல்வர் ஷாபாஸ் ஷரீப்பும் இப்போட்டியை கண்டு ரசித்தார்.
பாகிஸ்தான் ஆட்ட தொடக்கத்திலேயே முதலாவதாக ஒரு புள்ளியை எடுத்து அசத்தியது. இதையடுத்து சிறப்பாக விளையாடிய இந்தியா ஒரு கட்டத்தில் 9-7 என்ற முன்னிலை பெற்றது. பின்னர் பாகிஸ்தான் இரு புள்ளிகளை பெற்று 9-10 நிலையை எட்டியது. இதனால் மைதானம் மிகவும் அமைதியானது.
இரு அணியினரும் சிறப்பாக விளையாடியதால், ஆட்டமும் மிகவும் விருவிருப்படைந்தது. ஆட்டத்தின் இடைவேளையில் 22-19 என்ற புள்ளிகளை பெற்று இந்தியா முன்னிலை பெற்றது. இந்திய அணியை தொடர்ந்து பாகிஸ்தான் வந்ததால், ஆட்டத்தில் ரசிகர்களின் கரகோஷம் ஒலித்துக்கொண்டே இருந்தது.
இந்திய அணி 48-39 என்ற நிலையில் இருந்தபோது ஆட்டம் முடிவுற்றது. இதையடுத்து இந்தியா தொடர்ந்து 4-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசளிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment