டெல்லி மேல்– சபை எம்.பி.க்களில் 17 சதவீதம் பேர் கிரிமினல்கள்: 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் Delhi rajyasabha 17 percent mbs criminal 67 percent crores men
புதுடெல்லி, டிச. 7–
டெல்லி பாராளுமன்றத்திலும் மேல்– சபையிலும் உள்ள எம்.பி.க்கள் குறித்து ஏ.டி.ஆர். அமைப்பு ஆய்வு செய்தது. அதன் விவரம் வருமாறு:–
டெல்லி மேல்– சபையில் 245 எம்.பி.க்கள் உள்ளனர். 12 பேர் நியமன உறுப்பினர்கள். இவர்களில் 38 பேர் கிரிமினல் குற்றவாளிகள். அவர்களில் 15 பேர் தீவிர குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த உத்தரபிரதேச மேல்– சபை எம்.பி. மாகல் மீது கொலை வழக்கு உள்ளது. டெல்லியைச் சேர்ந்த காங்கிரஸ் மேல்– சபை எம்.பி. பெர்வேஸ் ஹஸ்மி மீது கிரிமினல் வழக்கு இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மேல்– சபை எம்.பி. மீது தேர்தல் வழக்கு உள்ளது.
முக்கிய கட்சிகளின் மேல்– சபை எம்.பி.க்கள் 227 பேரில் பெரும்பாலானோர் சராசரியாக ரூ. 20.17 கோடி சொத்து வசதி உள்ள கோடீஸ்வரர்கள். இதில் காங்கிரஸ் எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 16.74 கோடி.
பா.ஜனதா எம்.பி.க்களுக்கு ரூ. 8.51 கோடியும், பகுஜன் சமாஜ் எம்.பி.க்களுக்கு ரூ. 13.82 கோடியும், மார்க் கம்யூ. எம்.பி.க்களுக்கு ரூ.3.96 கோடி சொத்துக்களும் உள்ளன.
டெல்லி மேல்–சபை எம்.பி.க்களில் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. மகேந்திர பிரசாத்துக்கு அதிக அளவாக ரூ. 683.56 கோடி சொத்து உள்ளது. கர்நாடக சுயேட்சை எம்.பி.யான விஜய்மல்லையாவுக்கு ரூ. 615.42 கோடி, உ.பி. சமாஜ் வாடி கட்சி எம்.பி. ஜெயாபச்சனுக்கு ரூ. 493.86 கோடி சொத்து உள்ளது. 9 எம்.பி.க்களுக்கு மட்டும்தான் ரூ. 20 லட்சத்துக்கும் குறைவாக சொத்து இருக்கிறது.
மத்திய பிரதேச பா.ஜனதா எம்.பி. அனில்தேவுக்கு மிக குறைவாக ரூ. 2.75 லட்சம் சொத்து உள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. முகமதுநஜிமுல் சொத்து மதிப்பு ரூ. 3.19 லட்சமாகவும், மேற்கு சங்க மார்க்சிஸ் கம்யூ. எம்.பி. எறுமால்சக்கரா போர்தியின் சொத்து மதிப்பு ரூ. 5.47 லட்சமாகவும் உள்ளது.
மொத்தத்தில் 67 சதவீத மேல்–சபை எம்.பி.க்கள் கோடீஸ்வரர்களாகவும், 17 சதவீத எம்.பி.க்கள் குற்ற வாளிகாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது.
...
0 comments:
Post a Comment