Img ரஜினியின் பணிவை கண்டு வியந்தேன்: தெண்டுல்கர் புகழாரம் actor rajini humility they were amazed Tendulkar tribute
புதுடெல்லி, டிச. 15–
தனியார் டி.வி. நடத்திய கருத்து கணிப்பில் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் குறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், அவரை சந்தித்ததில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அப்போது அவரது பணிவு மற்றும் தன்னடக்கத்தை பார்த்து வியப்படைந்தேன். அவரது நற்பண்புகளை உண்மையிலேயே பாராட்டுகிறேன்.
அவர் கிரிக்கெட் மீது ஆர்வம் மிக்க ரசிகர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட் விளையாட்டை அவர் உற்று நோக்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு கிரிக்கெட் போட்டிகளை குறித்து விவாதித்தோம். குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் குறித்து பேசினோம்.
கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெற்றதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அதே நேரத்தில் இந்தியாவுக்காக மீண்டும் நான் விளையாட மாட்டேன். ஓய்வு என்னை பாதிக்கவில்லை. தற்போது குடும்பத்தினருடன் பல மணி நேரம் பொழுதை கழிக்கிறேன். எனது மகன் அர்ஜூன் மற்றும் அவனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்கிறேன்.
கிரிக்கெட் போட்டி எங்கு நடந்தாலும் அந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பை நானும் எனது மகனும் பார்த்து வருகிறோம். கிரிக்கெட்டில் இருந்து என்னால் விலக முடியாது. ஓய்வு நேரத்தை எனது குடும்பத்தினருடன் கழிக்கிறேன் என்றார்.
...
actor rajini humility they were amazed Tendulkar tribute
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.