6:36 PM
0

பெண்கள் இரட்டையர் தர வரிசையில் சானியா முதல் பத்து இடங்களுக்குள் முன்னேற்றம் womens doubles ranked sania top ten place Improvement

புதுடெல்லி, அக்.21-

உலக டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்று ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சானியா இந்த வாரம் எந்தப் போட்டியிலும் விளையாடாதபோதிலும் மற்ற வீராங்கனைகள் தங்களின் புள்ளிகளை இழந்ததால் சானியாவின் நிலை உயர்ந்துள்ளது.

சானியா இந்த மாத துவக்கத்தில் சீனா ஓபன் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டோக்கியோவில் நடைபெற்ற பான் பசிபிக் ஓபன் போட்டியிலும் இரட்டையர் போட்டியில் வென்றார். அவருடன் இணைந்து விளையாடிய ஜிம்பாப்வே நாட்டவரான காரா பிளாக்கும் 13 ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார்.

இத்தாலி நாட்டவர்களான சாரா எர்ரானி, ரோபர்டா வின்சி தொடர்ந்து முதல் நிலையைத் தக்க வைத்துள்ளனர். ஸ்லோவேனியா வீராங்கனையான காத்தரீனா ஸ்ரபோட்டனிக் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தைவானின் சியு வெய் செய் இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

...

shared via

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Recent Comments

Labels

Popular Posts

My Blog List

Popular Posts