தீவிரவாதி பிலால் மாலிக் விசாரணையில் முக்கியடைரி–போட்டோக்கள் சிக்கியது bilal malik inquiry photo diary trapped
Tamil NewsToday, 17:06
வேலூர், அக்.16–
இந்து முன்னணி வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் உள்பட பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த தீவிரவாதிகளான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரை வேலூரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் பிலால் மாலிக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களோடு பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று புத்தூரில் தீவிரவாதிகள் தங்கி இருந்த இடங்களுக்கு பிலால் மாலிக்கை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.
புத்தூரில் தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனையிட்டனர். வீட்டின் அனைத்து அறைகள் அங்கிருந்த பொருட்கள் படம் பிடிக்கபட்டது.
பொதுமக்கள் யாரையும் வீட்டின் அருகே நெருங்கவிடவில்லை 2 மணி நேரம் மாலிக்கிடம் அங்கு விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே வீட்டில் சோதனையிடப்பட்டது. அதில் முக்கிய ஆவணங்கள் டைரி, போட்டோக்கள் சிக்கியுள்ளது.
இதன் மூலம் மேலும் ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.
தீவிரவாதிகளுக்கு ஆயுதம், பணம் உதவி செய்தது யார்? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாதிகள் வேட்டையின் போது பெரும் பரபரப்பாக காணப்பட்ட அந்த பகுதி நேற்று மீண்டும் பரபரப்பாக காணப்பட்டது. தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விவரங்களை போலீசார் சேகரித்தனர்.
புத்தூரில் தீவிரவாதிகளை கைது செய்தபோது இன்ஸ்பெக்டர் லட்சுமணன் அரிவாளால் வெட்டப்பட்டார். இதையொட்டி, பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக புத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிலால் மாலிக் பின்னர் மீண்டும் வேலூருக்கு அழைத்து வரப்பட்டார்.
மேலும் சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பன்னா இஸ்மாயிலிடம் வாக்குமூலம் பெற வேலூரில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று சென்னை சென்றுள்ளனர். பன்னா இஸ்மாயிலையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேலூர் அழைத்து வந்து போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.
இதற்கிடையில் வக்கீல் புகழேந்தி வேலூரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் உள்ள பக்ருதீனை 15 நிமிடம் சந்தித்து நேற்று பேசினார்.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.