ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்: இஸ்ரேல் பிரதமர் கடும் தாக்கு Benjamin Netanyahu terms Rouhani as wolf in sheep clothing
Tamil NewsYesterday,
ஜெருசலேம், அக். 2-
ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியுள்ளார்.
அணு ஆயுதங்களை அழித்து விடுகிறோம் என ஈரான் ஒப்புக்கொண்டது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இனிக்க இனிக்க பேசிக்கொண்டு, சிரித்துக் கொண்டே கழுத்தை அறுக்கும் ஈரான் பிரதமரின் பேச்சில் அமெரிக்கா மயங்கி விடக்கூடாது. இந்த உண்மையை நான் கூறுவது இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு உகந்ததாக கருதுகிறேன்.
ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் முழுவதையும் முடிவுக்கு கொண்டு வந்து பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை அழிக்கும்படி சர்வதேச சமுதாயம் அறிவுறுத்த வேண்டும்.
ரவுகானியின் வார்த்தைகளை மட்டுமே நம்பி விடாமல் அதை அவர் காப்பாற்றுகிறாரா? சொன்னவாறு நடந்துக்கொள்கிறாரா? என்பதை கண்காணிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
கடுமையான பொருளாதார தடைகளின் மூலமும் ராணுவ மிரட்டலின் வாயிலாகவும் மட்டும்தான் ஈரானை வழிக்கு கொண்டுவர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.