கரீனாவும், இம்ரான்கானும் திருமணம் செய்தால் சைஃபின் கதி…?
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
கரீனா கபூரும், இம்ரான் கானும் இணைந்திருக்கும் புதிய படம் கோரி தேரே பியார் மெயின். கரண் ஜோஹர் படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் கரீனா, இம்ரான் ஜோடியைப் பார்த்த கரண் ஜோஹருக்கு வாய் தவறியுள்ளது. காரணம் கரீனாவும், இம்ரான்கானும் கல்யாணம் செய்துகிட்டா நன்றாக இருக்கும் என்றார் வெளிப்படையாகவே.
கரீனாவுக்கும், சைஃப் அலிகானுக்கும் இப்போதுதான் திருமணம் ஆகியிருக்கிறது. இம்ரான் கானும் தனது நெடுநாளைய காதலி அவந்திகாவை திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில் கரீனாவையும், இம்ரானையும் கோர்ப்பதா? என கரண் ஜோஹரிடம் கேட்டதற்கு,
அதனால் என்ன, இனியும் என்ன வேணும்னாலும் நடக்கலாம் என்று கூலாக வெடி ஒன்றை வீசியிருக்கிறார். இதுபற்றி கரீனாவிடம் கேட்டதற்கு, கரண் அப்படியா சொன்னார்? அப்படீன்னா சைஃபின் கதி…? என்று கேள்விக்குறியோடு முடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் கரீனா நடிக்க காரணம் அவரது கதாபாத்திரம் கிராமத்து பெண் என்பதால்தானாம். ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறார்கள். படம் நவம்பர் 22 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.