9:28 AM
0

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார் ஜோகோவிச் Shanghai Masters tennis Championship held Djokovic

ஷாங்காய், அக். 14-

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நட்சத்திர வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஒற்றையர் இறுதிச்சுற்று ஆட்டத்தில், அர்ஜென்டினாவின் டெல் போட்ரோவுடன் விளையாடிய ஜோகோவிச், முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுத்த டெல் போட்ரோ, 2-வது செட்டை 6-3 என வசப்படுத்தினார்.

இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் 3-வது செட் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. டை-பிரேக்கர் வரை நீடித்த அந்த செட்டை, ஜோகோவிச் 7-6 என கைப்பற்றி வெற்றி பெற்றார்.

டெல்போட்ரோவும், ஜோகோவிச்சும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 9 முறை ஜோகோவிச் வென்றுள்ளார். கடைசியாக மோதிய விம்பிள்டன் அரையிறுதி ஆட்டத்திலும் ஜோகோவிச் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

...

shared via

0 comments:

Post a Comment

Recent Comments

Labels

Popular Posts

My Blog List

Popular Posts