கமுதி: பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு தடையை மீறி பேரணி செல்ல
முயன்றவர்கள் மீது கமுதி அருகே போலீசார் லேசான தடியடி நடத்தியதால் பதற்றம்
ஏற்பட்டது.ராமநாதபுரம் மாவட் டம் கமுதி அருகே உள்ள
பசும்பொன்னில் நேற்று
முன்தினம் தேவர் ஜெயந்தி குரு பூஜை விழா துவங்கியது. ஏராளமானோர் முளைப்பாரி
மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். முடி காணிக்கை செலுத்தியும்,
பொங்கல் வைத்தும் அவர்கள் வழிபட்டனர். கடலாடியிலிருந்து 10 ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர் நேற்று போலீஸ் தடையை மீறி பேரணியாக சென்ற அவர்கள்
முதுகுளத்தூரை அடைந்தனர்.முதுகுளத்தூர் வழியாக பசும்பொன் செல்ல
அனுமதிக்குமாறு பேரணியில் வந்தவர்கள் போலீசாரிடம் வலியுறுத்தினர்.
முதுகுளத்தூரிலும் ஆயிரம் பேர் பால்குடத்துடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. டிஐஜி அமல்ராஜ் நடத்திய பேச்சுவார்த்தைக்கு
பிறகு அவர்கள் அனைவரும் அரசு பஸ்களில் பசும்பொன் புறப்பட்டு சென்றனர்.
கமுதி அருகே இடைச்சியூரணி, பெருமாள்தேவன்பட்டி, மூலக்கரை பட்டி, விருதுநகர் மாவட் டம் அம்மன்பட்டி, பாறைக்குளம், செட்டிகுளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்தும், இளைஞர்கள் ஜோதி ஏந்தியும் ஊர்வலமாக வந்தனர். கமுதி& அருப்புக்கோட்டை சாலை இடைச்சியூரணியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசா ருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில் 5 பேர் காயமடைந்தனர். பின்னர் ஊர்வலமாக வந்த அனைவரும் அரசு பஸ்களில் பசும்பொன் சென்றனர்.இதேபோல் விருதுநகர் மாவட்டம், அம்மன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 500 பேர் நேற்று போலீசாரை தாக்கி விட்டு தடையை மீறி பால் குடம் எடுத்துக் கொண்டு நடைபயணமாக பெருமாள்தேவன்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் நோக்கிச் சென்றனர்.
கைகளில் கட்டை மற்றும் கம்புகளுடன் காவல்துறையினரை மீறி சென்றதால் பதற்றமான சூழல் உருவானது.இதேபோல, கணக்கி, நல்லாங்குளம், உடையநாதபுரம், மேலபாறைக்குளம் ஆகிய கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரம் பேர் நடைபயணமாக பசும்பொன் புறப்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், பஸ்களில் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதைக் கண்டித்து அருப்புக்கோட்டை & கமுதி சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அசம்பாவிதங்களைத் தடுக்க, கிராம மக்களை நடைபயணமாக செல்ல காவல்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் இப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment