Saturday, December 14, 2013

Yahoo CEO apologizes for mail outage

Yahoo CEO apologizes for mail outage
யாஹூ மெயில் செயலிழப்பு: தலைமை செயல் அதிகாரி வருத்தம் தெரிவித்தார் Yahoo CEO apologizes for mail outage

சன்னிவேல், டிச. 14-

கடந்த திங்கட்கிழமை அன்று மாலை யாஹூ இணையதளத்தின் சேமிப்பு மையத்தில் ஏற்பட்ட ஒரு ஹார்ட்வேர் பிரச்சினையால் யாஹூ மெயில் செயலிழந்துபோனது. 280 மில்லியன் பயனாளர்கள் கொண்ட இந்த இணையதளத்தின் செயலிழப்பு அதன் மூன்று மில்லியன் உறுப்பினர்களைப் பாதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வெறுப்புற்ற பயனாளர்கள் தங்கள் கோபத்தை டுவிட்டர், பேஸ்புக் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினர். மின்னஞ்சல்களைப் பெறவோ, அனுப்பவோ முடியவில்லை என்பது பலரின் குற்றச்சாட்டாக இருந்தது.

திங்கட்கிழமை அன்றே தொழில்நுட்பப் பிரிவு இதனைச் சரி செய்ய முயன்றபோதும் பிரச்சினை எதிர்பார்த்ததைவிட பெரியதாக இருந்ததால் உடனே சரி செய்ய இயலவில்லை என்று யாஹூ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மரிஸ்ஸா மேயர் தெரிவித்துள்ளார். தங்கள் பயனாளர்களைக் கை விட்டதற்கும், வெறுப்புற வைத்ததற்கும் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று மதியம்தான் இந்த நிலைமை சீராக்கப்பட்டதாகவும் இந்த நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைகள் துரதிர்ஷ்டவசமானவை என்றபோதிலும், யாஹூவின் மெயில் பயன்பாடுகளின் முக்கியத்துவத்தை அவை வெளிப்படுத்தின. இந்த சேவையை மேம்படுத்துவதன் மூலமே புதிய பயனாளர்களை அந்நிறுவனம் ஈர்க்க முடியும் என்ற கருத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டியது. ஆனால் இந்தப் பிரச்சினை தொடங்கும் முன்னரே கடந்த அக்டோபர் மாதம் யாஹூ நிறுவனம் வெளியிட்ட ஒரு மறுவடிவம் அதன் பயனாளர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை என்று கூறப்படுகின்றது.
...

No comments:

Post a Comment