Thursday, December 12, 2013

In Delhi aam aadmi party rule in favor of the Congress Rahul Gandhi announced


Img டெல்லி In Delhi aam aadmi party rule in favor of the Congress Rahul Gandhi announced
'ஆம் ஆத்மி' ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு: பரிசீலனை செய்வதாக ராகுல் காந்தி அறிவிப்பு In Delhi aam aadmi party rule in favor of the Congress Rahul Gandhi announced

புதுடெல்லி, டிச.13-

டெல்லி சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், பா.ஜனதா கூட்டணிக்கு 32 இடங்களும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான 'ஆம் ஆத்மி' கட்சிக்கு 28 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களும் கிடைத்தன.

பா.ஜனதாவோ, ஆம் ஆத்மியோ ஆட்சி அமைக்க முன்வரவில்லை. ஆம் ஆத்மி கட்சி, 'யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம், யாரிடமும் ஆதரவு கேட்கவும் மாட்டோம், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம்' என்று கூறியுள்ளது. மறுதேர்தலை சந்திப்பதற்கும் தயார் என்று அக்கட்சி அறிவித்தது.

இதனால், புதிய அரசு அமைவதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்றும், மறுதேர்தல் நடத்தப்படும் என்றும் பல்வேறு வகையான யூகங்கள் உலவி வருகின்றன. இதற்கிடையே, டெல்லியில் புதிய அரசு அமைவதற்கு ஏற்பாடுகளை செய்யும்படி மாநில கவர்னர் நஜீப் ஜங்கை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள பா.ஜனதாவின் முதல்-மந்திரி பதவி வேட்பாளர் ஹர்ஷ வர்த்தனுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். அதன்பேரில், கவர்னர் மாளிகையில் கவர்னர் நஜீப் ஜங்கை ஹர்ஷ வர்த்தன் நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது, தங்களுக்கு போதிய இடங்கள் கிடைக்காததால், ஆட்சி அமைக்காமல், எதிர்க்கட்சி வரிசையில் அமர விரும்புவதாக தெரிவித்தார். பின்னர், நிருபர்களிடம் பேசிய அவர், 'மறுதேர்தல் நடத்தப்படும் சூழ்நிலை வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல' என்று கூறினார்.

இந்நிலையில், வெற்றி பெற்ற 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினர். அப்போது, திடீர் திருப்பமாக, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.க்களிடம், அவர்களது வெற்றிக்கான காரணம் பற்றியும், கட்சியின் தோல்விக்கான காரணம் பற்றியும் ராகுல் காந்தி கேட்டார். இதுபற்றி அறிக்கை அளிக்குமாறு அவர் உத்தரவிட்டார். பின்னர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ஜெய் கிஷன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அந்த அரசை வெளியில் இருந்து ஆதரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், புதிய அரசு அமைக்க ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பது பற்றி ராகுல் காந்தியிடமும் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், 'அது பரிசீலனையில் இருக்கிறது' என்று மட்டும் பதில் அளித்தார். இதன்மூலம், டெல்லியில், காங்கிரஸ் ஆதரவுடன், ஆம் ஆத்மி ஆட்சி அமைய வாய்ப்பு உருவாகி உள்ளது.
...
In Delhi aam aadmi party rule in favor of the Congress Rahul Gandhi announced

No comments:

Post a Comment