Thursday, December 26, 2013

Home ministry inspects AAP on foreign fund

Img ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெளிநாட்டு நிதி விவரங்களை ஆய்வு செய்கிறது மத்திய அரசு Home ministry inspects AAP on foreign fund

புதுடெல்லி, டிச. 26-

டெல்லியில் கட்சி ஆரம்பித்து ஒரு ஆண்டிற்குள் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. அவரது ஆம் ஆத்மி கட்சி தனது முதல் தேர்தலிலேயே 28 தொகுதிகளில் வென்று பலத்தை நிரூபித்திருக்கிறது.

கட்சியைத் தொடங்கி அதற்கான நிதி வசூல் செய்ய ஆரம்பித்ததில் இருந்தே ஆம் ஆத்மி கட்சியின் நம்பகத்தன்மை மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். ஆனால் தாங்கள் வசூலிக்கும் நன்கொடைக்கு சரியாக கணக்கு பராமரிக்கப்படுவதாக கெஜ்ரிவால் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆம் ஆத்மி கட்சி நிதி பெற்றது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. எனவே, நன்கொடை ரசீது மற்றும் கணக்கு விவரங்கள் விரைவில் ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
...

No comments:

Post a Comment