Friday, December 27, 2013

Devyani issue United States style will attack India

devyani issue United States style will attack India  தேவயானி விவகாரம்: அமெரிக்கா பாணியிலேயே அமெரிக்காவை போட்டுத் தாக்கும் இந்தியா devyani issue United States style will attack India

devyani issue United States style will attack India  புதுடெல்லி, டிச.27-

இந்திய துணைத் தூதரான தேவயானி கோப்ரகடே விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ள இந்தியா அந்நாட்டிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கையை எடுத்துள்ளது.devyani issue United States style will attack India 

அந்நாட்டு அதிகாரிகளுக்கு விமான நிலையங்களுக்கு செல்ல சிறப்பு நுழைவு உரிமத்தை வழங்கிய இந்திய அரசு அவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கிய இச்சலுகையை தற்போது ரத்து செய்துள்ளது. மேலும் இந்தியாவில் பணியாற்றும் அந்நாட்டை சேர்ந்த தூதரக அதிகாரிகளின் சம்பளம், பிடித்தம் மற்றும் அவர்கள் கட்டி வரும் வரிகள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு கூறி அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்ட இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெல், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் நெறிமுறைப்படி தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும், குடியேற்ற உதவிகளை அளிக்குமாறு கேட்டார். அப்போது, தூதருக்கான சிறப்பு அந்தஸ்துகள் அனைத்தும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டதை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து நான்சி பாவெல் தனது பயணத்தை ரத்து செய்தார்.

இதேபோல், அமெரிக்க அதிகாரிகள் அனைவரும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட போது, அந்நாட்டு தூதுக் குழுவின் துணைத் தலைவர் மைக்கேல் பெல்லேட்டியருக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை தலைமையகத்தின் தலைவர் விக்ரம் துரைசாமி சம்மன் அனுப்பி வரவழைத்தார். அப்போது அவரிடம் இந்திய அரசின் ஆட்சேபங்களை உறுதியாக தெரிவித்தார்.

ஆனால் இவ்வளவு நடந்த பிறகும் அமெரிக்கா, வடிவேலு பாணியில் ஒன்றுமே நடக்காத மாதிரி தன்னை வெளிக்காட்டி வருவது சிரிப்பை வரவழைக்கிறது.
...
 

No comments:

Post a Comment