Monday, December 16, 2013

Centre makes major changes in MNREGA

Centre makes major changes in MNREGA

Indian news channel . Tamil news
நூறு நாள் வேலைத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு Centre makes major changes in MNREGA

புதுடெல்லி, டிச. 16-

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல மாற்றங்களை அரசு செய்துள்ளது. இதுகுறித்து மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது,

நூறு நாள் வேலைத்திட்டத்திற்கான ஊதியத்தை 15 நாட்களுக்குள் வழங்காவிட்டால் வேலை செய்த நபருக்கு ஒரு நாளுக்கான சம்பளத்தில் 0.05 சதவிகித தொகையை நஷ்ட ஈடாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்நஷ்ட ஈட்டு தொகையை சம்மந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.

வேலை வாய்ப்பு அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கழிவறை கட்டுவதற்காக தற்போது வழங்கும் 4,500 ரூபாய்க்கு பதிலாக ரூ.10,000 வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 60 சதவிகித மக்கள் திறந்த வெளியை கழிவறையாக உபயோகிப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், ஏழை மக்களுக்கும் வீடு கட்டித்தரவும், சமூக சேமிப்பு கூடம் அமைக்கவும், விவசாய விளைபொருட்களை வர்த்தகம் செய்ய கட்டிடம் கட்டவும், செங்கல் சூளை தயாரிக்கவும் நிதி உதவி தர அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்திரா ஆவாஜ் யோஜனா (ஐ.ஏ.ஒய்) திட்டத்துடன் இணைந்து கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

...

Centre makes major changes in MNREGA

No comments:

Post a Comment