Friday, December 13, 2013

5 killed in mumbai high rise rife

Img மும்பை: 26 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து 5 பேர் பலி 5 killed in mumbai high rise rife

மும்பை, டிச.14-

தெற்கு மும்பை பகுதியில் உள்ள கெம்ப்ஸ் கார்னர் பகுதியில் 26 மாடிகளை கொண்ட சொகுசு அடுக்ககம் ஒன்று உள்ளது.

மாண்ட் பிளாங்க் என்ற பெயர் கொண்ட இந்த அடுக்ககத்தின் 12வது மாடியில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும 14 தீயணைப்பு வாகனங்கள், 7 தண்ணீர் லாரிகள், 4 ஆம்புலன்ஸ்களில் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இன்று அதிகாலை வரை நூற்றுக்கணக்கான வீரர்கள் வெகுதீவிரமாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தின்போது வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் அங்கு வசிக்கும் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

2 அதிகாரிகள் உள்பட 5 மீட்புப் படையினரும் தீயில் சிக்கி படுகாயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
...

No comments:

Post a Comment