குப்பைப்படக் காலத்தை மாற்றுமா ஆரம்பம்
தமிழில் கடந்த இரண்டு மாதங்களாக வெறும் குப்பைப்படங்களே வெளிவந்துள்ளதாக பலர் கவலை தெரிவிக்கிறார்கள்.
பட்டத்து யானையில் ஆரம்பித்த வீழ்ச்சி மீட்க முடியாத வீழ்ச்சியாக இருக்கிறது.
பொய்யான விமர்சனங்களை செய்து மூன்று நாட்கள் ஓட்டி கோடி கோடியாக வசூல் என்று போலி பாக்ஸ் றிப்போட் விட்டு இவர்கள் சீவிக்கிறார்கள்.
யாதொரு பொறுப்பும் இல்லாமல் வெளியான விஜய்யின் தலைவா முதல் விஜய்சேதுபதியின் இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா, தேசிங்குராஜா, யாயா.. என்று தொடர் சறுக்கலாக இருக்கிறது.
இதில் அஜித்தும் அடங்கப்போகிறாரா இல்லையா என்பது ஆரம்பத்தில் தங்கியுள்ளது.
அதற்கு உதாரணம் போல தீபாவளிக்கு விட்டால் மோதலில் தோற்றுவிடும் என்ற அச்சமோ என்னவோ இரண்டு நாட்கள் முன்னதாக விடுகிறார்கள்.
அஜித்தும் கவிழ்ந்தால் தற்போதைக்கு எஞ்சியுள்ளது கோச்சடையானே.
அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் நடித்து விஷ்ணுவர்த்தன் டைரக்ட் செய்துள்ள படம் ஆரம்பம். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதோடு தீபாவளிக்கு விஷாலின் பாண்டியநாடு, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா, ஆகிய படங்களும் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டது. ஆல் இன் ஆல் அழகுராஜாவின் தியேட்டர் புக்கிங் முடிந்து விட்டது.
இந்த நிலையில் அஜீத்தின் ஆரம்பம் தீபாளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது வருகிற 31ந் தேதி ரிலீசாவதாக அறிவித்திருக்கிறார்கள்.
"ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க" என்று வழக்கம்போல காரணம் சொன்னாலும், தீபாவளி சனிக்கிழமை வருவதால் வியாழன், வெள்ளி கலெக்ஷனை விட வேண்டாம் என்று கருதியே முன்னதாகவே படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.
தீபாவளிக்கு ரிலீஸ் செய்தால் ஆரம்பம் படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் மற்ற படத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதும் இதற்கு இன்னொரு முக்கிய காரணம்.
shared via
No comments:
Post a Comment