Thursday, December 5, 2013

Nelson mandela dead சற்று முன்னர் நெல்சன் மண்டேலா காலமானார்

சற்று முன்னர் நெல்சன் மண்டேலா காலமானார்

நெல்சன் மண்டேலா மரணமடைந்துவிட்டார். அவருக்கு தற்போது வயது 95. மண்டேலா அமைதியாக இறந்தார் என்று தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா கூறியிருக்கிறார்.

மண்டேலா ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார்.அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் அவர் இறக்கும் தருவாயில் இருந்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார்.

மண்டேலா மருத்துவமனையில் இருந்து செப்டம்பர் மாதம் வீடு திரும்பியதிலிருந்து ,அவரது இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார். அவரது இழப்பு உலக மக்களை கண்கலங்க வைத்துள்ளது. உலகம் போற்றும் மாவீரர் என்றும் எம்மத்தியில் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள்.

 நன்றி செண்பகம் இணையம்

shared via

Sympathy for the death members Parliament adjourned till tomorrow

மறைந்த உறுப்பினர்களுக்கு அனுதாபம்: பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு      Sympathy for the death members Parliament adjourned till tomorrow