Friday, August 23, 2013

பள்ளி விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை கேலி செய்த பெண் school function america president obama insult woman

அமெரிக்க ராணுவ ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணைய தளத்துக்கு வழங்கியதாக முன்னாள் ராணுவ வீரர் பிரட்லி மேன்னிங் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 35 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நியூயார்க் நகரில் கியாராகாசில் உள்ள ஒரு உயர் நிலை பள்ளியில் விழா நடந்தது. அதில், அதிபர் ஒபாமா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட பிரட்லி மேன்னிங்கின் ஆதரவாளரான ஒரு பெண் ஒபாமாவின் பேச்சை இடை மறித்து கேலி, கிண்டல் செய்தார்.
மேலும் பிரட்லி மேன்னிங்கின் 35 ஆண்டு ஜெயில் தண்டனையை ரத்து செய்து விட்டு அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அவரது கேலி, கிண்டலை ஒபாமா சீரிஸ்சாக எடுத்து கொள்ள வில்லை.
உங்கள் கோரிக்கையை கவனிக்கிறேன் என்று மட்டும் சொன்னார். இதனால் ஒபாமாவின் பேச்சு ஒரு நிமிடம் தடைப்பட்டது. இச்சம் பவத்தால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
அதை தொடர்ந்து அப்பெண் விழா நடைபெற்ற ஆடிட்டோரியத்தில் இருந்து பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து பேசிய ஒபாமா, அப்பெண்ணின் கோரிக்கை முக்கியமானது என்றார்.